உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

கடலுார்; கடலுாரில் அ.தி.மு.க., சார்பில் சுதந்திர போராட்ட தியாகி, முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது. அதனையொட்டி கடலுார் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில், மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், பாண்டியன் எம்.எல்.ஏ., உட்பட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத் தலைவர் குமார், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், முன்னாள் சேர்மன் தெய்வபக்கிரி. பகுதி செயலார்கள் வெங்கட்ராமன், வினோத்ராஜ், அ.தி.மு.க., நிர்வாகி செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி பிரித்திவிராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் வேல்முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ