மேலும் செய்திகள்
சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் முப்பெரும் விழா
17-Nov-2026
சிதம்பரம்: இன்னர் வீல் சங்க நிறுவனர் மார்கரெட் ஆலிவர் கோல்டிங் பிறந்தநாளையொட்டி நந்தனார் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கான உடற்தகுதி நிகழ்ச்சி நடந்தது. இன்னர்வீல் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி அனிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரா, உதவித் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க சாசன செயலாளர் தீபக்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சியையொட்டி பள்ளி அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. . வேதா சிவப்பிரகாசம் நன்றி கூறினார்
17-Nov-2026