உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுவர் விழுந்து சிறுமி சாவு

சுவர் விழுந்து சிறுமி சாவு

விருத்தாசலம்: சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலம் அடுத்த எடையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. மகள் பஹானா, 8. விருத்தாசலம் புதுப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பஹானா, புதுகுப்பம் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார்.கடந்த 20ம் தேதி சொந்த ஊரான எடையூர் சென்ற போது, பஹானா வீட்டிற்கு எதிரே ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது, பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார்.புதுச்சேரி ஜிப்மரில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ