உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓடையில் மூழ்கி சிறுமி பலி

ஓடையில் மூழ்கி சிறுமி பலி

வேப்பூர் : வேப்பூர் அருகே ஓடையில் மூழ்கி சிறுமி இறந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், பாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் ஜெனிபர், 13; இவர், வேப்பூர் அடுத்த காட்டுமயிலுாரில் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு வந்துள்ளார். நேற்று காலை 10:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஓடையில் தோழிகளுடன் குளிக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர், சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை