உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

பண்ருட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அரசு டவுன் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலத்தில் வடுகப்பாளையம் வழியாக நேற்று மதியம் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மணிகண்டன், 45; ஓட்டினார். பஸ்சில் 2 பயணிகள் மட்டுமே பயணித்தனர். வடுகப்பாளையம் அருகே வந்த போது பைக்கில் வந்தவருக்கு வழிவிட டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்பிய போது, சாலையோர நிலத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வழியாக சென்றவர்கள், இடிபாடுகளில் சிக்கிய லேசான காயமடைந்த டிரைவர் மணிகண்டன், பயணியர் மேல்குமாரமங்கலம் கலியவரதன் மனைவி பூங்காவனம், 65; ஆகி யோரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை