உண்ணாவிரத போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
கடலுார் : துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்புத்தலைவர் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை: சென்னையில் ஊதிய குறைப்பு மற்றும் தனியாருக்கு குத்தகை விடப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டிய தமிழக அரசு, போராட்டத்தை சீர்குலைத்தது கண்டனத்திற்குரியது. அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை தனியாருக்கு மாற்றுவதை எதிர்த்தும், சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 3ம் தேதி சென்னையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் பேராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.