உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாலுகா அளவிலான செஸ் போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

தாலுகா அளவிலான செஸ் போட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

கடலுார்: கடலுார் செஸ் அகாடமியின் இரண்டாவது கிளை துவக்க விழாவையொட்டி, தாலுகா அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.கடலுார் செஸ் அகாடமியின் இரண்டாவது கிளை திருப்பாதிரிப்புலியூரில் துவங்கப்பட்டது. அதையொட்டி நடந்த தாலுகா அளவிலான செஸ் விளையாட்டுப்போட்டிகளில் கடலுார் தாலுகாவைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கடலுார் மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோடையில் கற்றல் கொண்டாட்டத்தில் செஸ் பயிற்சி பெறும் மாணவர்கள், போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உடற்கல்வி இயக்குனர் சாமிக்கண்ணு, கடலுார் மாவட்ட சதுரங்க கழக நிர்வாகி சங்கர், பிடே ஆர்பிட்டர் நாராயணன், போட்டியை துவக்கி வைத்தனர்.கடலுார் செஸ் அகாடமி தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் கலைச்செல்வன், போட்டியின் தலைமை நடுவர் புவனா ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி, கடலுார் மாவட்ட சதுரங்க கழக கன்வீனர் பிரேம்குமார், விவசாய முன்னேற்ற கழக செயலாளர் பாலு ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.பயிற்சியாளர்கள் கபில், சுரேஷ்குமார், ஸ்ரீருத்ரகணேஷ் ஆகியோர் போட்டியின் நடுவராக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கடலுார் மாவட்ட சதுரங்க கழக நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ