மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான தடகள போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
04-Sep-2025
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
புதுச்சத்திரம்:சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதுச்சத்திரம் அடுத்த சாமியார் பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர்கள் மணிபாலன், ஆதித்யன் இருவரும் பங்கேற்றனர். இதில் மணிபாலன் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார். டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் ஆதித்யன் இரண்டாம் இடம் பிடித்து, இம்மாதம் 24 ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க இருவரும் தேர்வு பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ள, மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.
04-Sep-2025
05-Sep-2025