மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது
05-Sep-2025
நடுவீரப்பட்டு: கடலுார் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் விளையாட தகுதி பெற்றதையடுத்து ஆசிரியர்கள் பாராட்டினர். கடலுார் அடுத்த ராமாபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் ஆறுமுகம்,14. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்திய பள்ளி விளையாட்டுக்குழுமம் நடத்திய மண்டல அளவிலான டென்னிஸ் போட்டியில், 17வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர் ஆறுமுகத்தை, பள்ளி தலைமையாசிரியர் எல்லப்பன், உடற்கல்வி ஆசிரியர் விக்ரமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
05-Sep-2025