மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
31-Aug-2025
கடலுார் : கடலுாரில் அரசு போக்குவரத்து மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் மொட்டை அடித்து நுாதன போரா ட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து, விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 37 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுார் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் எதிரில் நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று மொட்டையடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., கவுரவ தலைவர் பாஸ்கரன் தலைமையில் ஏராள மானோர் பங்கேற்றனர்.
31-Aug-2025