உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

நெய்வேலி: இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என என்.எல்.சி., முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசினார்.என்.எல்.சி., ஒற்றாடல் துறையின் சார்பில், விஜிலென்ஸ் விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நெய்வேலியில் நடந்த நிகழ்வை என்.எல்.சி. சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இயக்குனர்கள் சமீர் ஸ்வரூப், பிரசன்ன குமார் ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். விஜிலென்ஸ் துறையின் முதன்மை பொது மேலாளர் இரணியன் வரவேற்றார். நெய்வேலியில் உள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட “நேர்மைக் கழகங்கள்” அமைப்பை துவக்கி வைத்து என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசுகையில்., இந்திய அரசின் 2047 ம் ஆண்டிற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். விஜிலென்ஸ் துறையின் விழிப்புணர்வு வாரம் என்பது என்.எல்.சி.,ஊழியர்களைத் தாண்டி, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் நேர்மையாக செல்பட வைப்பதற்கான ஒரு தொடர் முயற்சியாகும் என்றார். என்.எல்.சி.,சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில்., மத்திய விஜிலென்ஸ் துறையின் இந்த ஆண்டிற்கான கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில், நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். விஜிலென்ஸ் துறையின் பொது மேலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ