அண்ணாமலை பல்கலையில் இன்று பட்டமளிப்பு விழா
சிதம்பரம், : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 86வது பட்டமளிப்பு விழா, இன்று (17ம் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு நடைபெறும் விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.துணைவேந்தர் கதிரேசன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். உயர்கல்வி துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கோவி செழியன், சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் சவுமியா சுவாமிநாதன் உரையாற்றுகின்றனர். இவ்விழாவில் பங்கேற்க நேற்று மாலை 5:00 மணியளவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் ரவி வருகை தந்தார். அவரை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், துணை வேந்தர் கதிரேசன் ஆகியோர் வரவேற்றனர்.