உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயலுார் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்

வயலுார் ஊராட்சியில் கிராம சபைக்கூட்டம்

புவனகிரி; கீரப்பாளையம் ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம் நேற்று நடந்தது. கீரப்பாளையம் ஒன்றியம் வயலுார் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தங்கமுருகவேல் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் ஜேசு முன்னிலை வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் சிறப்பு விருந்தினராக கிராம சபை கூட்டத்தல் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதுவரை நடந்த பணிகள், மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து விவாதித்தனர். மக்கள் நல பணியாளர் கிரிஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி