மேலும் செய்திகள்
கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
03-Nov-2025
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நேற்று நடந்தது. பங்குத்தந்தை நாயகம் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. இதில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு கல்லறை தோட்டங்களில் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
03-Nov-2025