ஆய்வில் வல்லவர் நடவடிக்கையில் நல்லவர்
கடலுார் மாவட்ட வளர்ச்சிப்பணிகளை ஒன்று விடாமல் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பம்பரமாக சுழன்று ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக பாலம் கட்டுமானப்பணி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கனவு இல்லம் கட்டும் பணி, சாலை அமைக்கும் பணி என அனைத்து பகுதிகளிலும் ஒன்றுவிடாமல் ஆய்வு செய்து வருவது வரவேற்கத்தக்கது.ஆனால், ஆய்வில் ஏற்படும் குறை நிறைகள் பற்றி சொல்வதில்லை. கட்டுமான பணிகளில் கலெக்டர் ஆய்வின்போது குறை கண்டுபிடித்தால் அதன் மீது நடவடிக்கை போன்ற விஷயங்கள் மட்டும் வெளியே தெரிவதில்லை. கலெக்டர் குறை நிறைகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்போதுதான் மற்ற ஒப்பந்ததாரர்கள் தவறு செய்யாமல் தமது பணிகளை சிறப்பாக செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இனியாவது கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முயற்சிப்பாரா.