உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்பு கூட்டம்

குறைகேட்பு கூட்டம்

கடலுார்: கடலுாரில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 415 மனுக்களை பெறப்பட்டது.மனுக்கள் மீது விசாரணை நடத்தி மனுதாரருக்கு தீர்வு வழங்க கலெக்டர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை