மேலும் செய்திகள்
பவானி ஆற்றில் மூழ்கி பஸ் கண்டக்டர் பலி
01-Nov-2026
பரங்கிப்பேட்டை: கோஷ்டி மோதல் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி ஆதிவராகநத்தத்தை சேர்ந்தவர் சசிகலா,35; இவரது குடும்பத்திற்க்கும், அதே பகுதியை சேர்ந்த சசிகுணா குடும்பத்திற்கும் செல்போனில் போட்டோ அனுப்பியது சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.,22) மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர். அதில், காயமடைந்த சசிகலா, சித்ரா, இந்திரா, வனஸ்ரீ ஆகியோர் , புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சசிகலா, சசிகுணா ஆகியோர் கொடுத்த புகார்களின் பேரில் புவனகிரி போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, ரவிச்சந்திரன்,36; ராஜேந்திரன்,55; பிரபு,33; சுமன்,37; ஆகியோரை கைது செய்தனர். மேலும், 6 பேரை தேடிவருகின்றனர்.
01-Nov-2026