உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாராய வியாபாரிகள் 2 பேருக்கு குண்டாஸ்

சாராய வியாபாரிகள் 2 பேருக்கு குண்டாஸ்

கடலுார் : பண்ருட்டியில் 2 சாராய வியாபாரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், கடந்த 1ம் தேதி, மேல்குமாரமங்கலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் பி.என்.பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்,42; என்பவரை பிடித்து சோதனை செய்ததில் 10 லிட்டர் சாராயம் வைத்திருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று, கடந்த 2ம் தேதி மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன்,49; என்பவரிடம் 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். உடன், அவரை போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் தலா 3 சாராய வழக்குகள் உள்ளன.இருவரின் தொடர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரைப்படி, ஜெகதீசன், மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை