மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது
28-Sep-2024
கடலுார் : மாவட்டத்தில் ரவுடிகள், கஞ்சா வியாபாரிகள் உள்ளிட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.நெய்வேலி, வட்டம் 30யை சேர்ந்தவர் நடராஜன் (எ) அய்யப்பன், 32;சின்னகாப்பான்குளத்தை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ்,32; ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, கைக்கோளர்குப்பம் அருகே, கோபி,22; என்பவரை தாக்கிய வழக்கில், தெர்மல் போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் கஞ்சா விற்றது தொடர்பாக சோமாசிபாளையம் வீரமணி மகன் குமரவேல்,24; சென்னை தாம்பரம் சபாபதி மகன் நவீன்,23; நடுவீரப்பட்டு ஞானவேல் மகன் நந்தகுமார்,26; ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுப்பேட்டை போலீசார் கைது செய்து, கடலுார் சிறையில் அடைத்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார்,38; இவர் மீது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றது தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், லாட்டரி சீட்டு விற்ற செந்தில்குமாரை காட்டுமன்னார்கோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்களின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகல்களை, கடலுார் மத்திய சிறையில் உள்ள நடராஜன், விக்னேஷ், நந்தகுமார், குமரவேல், நவீன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரிடம் முறையே நெய்வேலி தர்மல், புதுப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழங்கினர்.
28-Sep-2024