மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்றவர் கைது
11-Aug-2025
குறிஞ்சிப்பாடி:குட்கா விற்ற மூதாட்டி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி தலைமையிலான போலீசார் பெத்தநாயக்கன்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கடைகாரர் ஜூலியா மேரி ,60; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
11-Aug-2025