உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபைல் போன் ஒப்படைப்பு

மொபைல் போன் ஒப்படைப்பு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே டாஸ்மார்க் கடை அருகே ஒரு ஆண்டிற்கு முன்பு காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுாரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மொபைல் போன் கடந்த ஆண்டு ஆக., 24ம் தேதி கானுார் டாஸ்மாக் கடை அருகே காணாமல் போனது. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் சுகாதார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் காணாமல் போன மொபைல் போன் சேத்தியாதோப்பு பகுதியில் ஒரு நபரிடம் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் மொபைல் போனை பறிமுதல் செய்து சுதாகரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை