கடும் பனிப்பொழிவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை, நெல்லிக்குப்பம் பகுதி களில் நேற்று கடும் பனிப் பொழிவு காரணமாக, அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து சென்றன. பரங்கிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஜனவரி முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்து, காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், பஸ் லாரி உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. இதுபோல், நெல்லிக்குப்பம் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு இருந்தது.