உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயர்கல்வி வழிகாட்டல் முகாம்

உயர்கல்வி வழிகாட்டல் முகாம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், நான் முதல்வன் உயர்வுக்குப்படி என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது.காட்டுமன்னார்கோவில் ராணி மஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் சப் கலெக்டர்ராஷ்மிராணி தலைமை தாங்கினார். சப் கலெக்டர் (பயிற்சி) ஆகாஷ், சேத்தியாத்தோப்பு டிஎஸ்.பி., ரூபன்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்தவர்கள், இடை நின்ற மாணவர்களுக்கு மேல் படிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ,வங்கிக் கடன்கள் மற்றும் உதவித்தொகைபெறுவது, அரசின் திட்டங்கள் மற்றும் உதவிகள், உயர்கல்வி முக்கியத்துவம், உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.முகாமில், கல்வி கடனுதவிக்கான காசோலைகளை சப் கலெக்டர் ராஷ்மி ராணி மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி , தலைமை இடத்து துணை தாசில்தார் ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தாசில்தார் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை