உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஹிந்தி தேர்வு

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் ஹிந்தி தேர்வு

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி தேர்வு நடந்தது. சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஹிந்தி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் மூன்றாம் கட்டமாக தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் நடத்தப்பட்ட இத்தேர்வில், ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, ப்ரவேசிகா, விஷாரத், பூர்வார்த்மிக், ப்ரவீன் பூர்வார்ட், உத்ரார்த் போன்ற தேர்வுகள் நடந்தன. சிதம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 540 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். வீன்ஸ் குழும பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் குமார், தாளாளர் ரூபியாள் ராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி