உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்

கடலுார் : கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில், கடலுார் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் கோட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.கடலுார் மாவட்டத்தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில செயலாளர் சனில்குமார், மாவட்ட பொதுசெயலாளர் ராஜன், ஆர்.எஸ்.எஸ்.,சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், வேல்முருகன், செல்வம், பிச்சப்பிள்ளை மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகனின் புனித தலத்தை களங்கப்படுத்தும் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுத்து நிறுத்த வேண்டும். புழல் சிறையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ