கடலுார் மாவட்டத்தில் பள்ளி கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.