போலி சான்றிதழ் வழக்கில் கைதானவர் வீட்டில் சோதனை
கடலுார்; போலி சான்றிதழ் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.புவனகிரி அடுத்த கீழமணக்குடியைச் சேர்ந்த இளம்வழுதி,37; இவுர், அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ் போலியாக வைத்திருந்த வழக்கில் வடலுார் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், இந்த மோசடியில் வடலுாரைச் சேர்ந்த விக்னேஷ்,27; மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக செக்யூரிட்டியாக பணிபுரிந்து இறந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று இளம்வழுதி, விக்னேஷ் மற்றும் ஒருவரின் வீடுகளில் வடலுார் போலீசார் சோதனை செய்தனர். அதில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும், மூவரின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.