கவுரவ விரிவுரையாளர்கள் திட்டக்குடியில் போராட்டம்
திட்டக்குடி : திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடந்தது.கல்லுாரி முன் நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரபாகரன், செயலாளர் சரவணன், துணை செயலாளர் சுஹாஷினி முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் பால்ராஜ், வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களக்கு பல்கலை கழகம் மானியக்குழு வழங்க வேண்டிய மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.