உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் 

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் 

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலுள்ள அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு யூ.ஜி.சி.,நிர்ணயம் செய்த 57,800 ரூபாய் ஊதியம், அனைவருக்கும் 12 மாத சம்பளம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுார் அரசுக் கல்லுாரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் ராஜகுருநாதன், கண்ணதாசன், மாறன் மற்றும் சுதாகர் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை