உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 2ம் நாளாக வெயில் சதம்

கடலுாரில் 2ம் நாளாக வெயில் சதம்

கடலுார்: கடலுாரில் இரண்டாம் நாளாக வெயிலின் அளவு 100 டிகிரியை கடந்தது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 4 டிகிரி வரையில் கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 101.1 டிகிரி பதிவான நிலையில், நேற்றும் 101 டிகிரி வெயில் பதிவானது. பகல் பொழுதில் கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. காலை முதல் அனல் காற்று வீசியது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !