உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு புகுந்து ரூ.42,000 திருட்டு

வீடு புகுந்து ரூ.42,000 திருட்டு

புதுச்சத்திரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 68. இவர் தற்போது கடலுாரில் வசிக்கிறார். இவர், ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், விவசாய பணிக்காக 42,000 ரூபாயை பீரோவில் வைத்திருந்தார்.இந்நிலையில், ஆலப்பாக்கம் வீட்டிற்கு நேற்று வந்த சம்பத்குமார் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து சம்பத்குமார் அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை