வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஆய்வு
கடலுார்: கடலுார் ஆயுதப்படை வளாகத்தில் புதிய காவலர் குடியிருப்பு கட்டடத்தை வீட்டு வசதி வாரிய இயக்குனர் ஆய்வு செய்தார்.கடலுார் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக காவலர் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய இயக்குனர் சைலேஷ்குமார் யாதவ் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய வேண்டுமென, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.எஸ்.பி., ஜெயக்குமார், காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் அஷ்ஷர் அகமது, சுந்தர், சிவக்குமார், சாந்தலட்சுமி, ஆயுதப்படை டி.எஸ்.பி., அப்பண்டராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் உடனிருந்தனர்.