சுரேந்திரா மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி
கடலுார்,: உலக எலும்புரை தினத்தையொட்டி கடலுார் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை முன்பு மனித சங்கிலி நடந்தது.உலக எலும்புரை தினம் நாடெங்கிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடலுாரில் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை சார்பில் எலும்புரை தினத்தையொட்டி மனித சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மருத்துவமனை சேர்மன் ராஜேந்திரன் மனித சங்கிலியை தொடங்கி வைத்தார்.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேந்திரகுமார் முன்னிலை வகித்தார். இந்த மனித சங்கிலியில் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.