உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனித உரிமை ஆணையம் விசாரணை

மனித உரிமை ஆணையம் விசாரணை

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மாதம் நடந்த ஆனித் திருமஞ்சன விழாவின் போது, சிவகாமசுந்தரி, நடராஜர் சுவாமியை துணியால் மறைத்தபடியே, தீட்சிதர்கள் கோவிலுக்குள் கொண்டு சென்றனர். இதனால் சுவாமி வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக பொது தீட்சிதர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தெய்வீக பக்தர் பேரவை நிறுவனர் ஜெமினி ராதா, மாநில மனித உரிமை ஆணைத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி