பைக் விபத்தில் கணவர் பலி: மனைவி, குழந்தை படுகாயம்
விருத்தாசலம் : பைக் மீது வேன் மோதிய விபத்தில் கணவர் இறந்தார். மனைவி மற்றும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் ராமன், 28; இவர் நேற்று தனது மனைவி காந்திமதி, 26; மகள் ஷர்னிகா, 1. ஆகியோருடன் பைக்கில், மங்கலம்பேட்டையில் நேற்று நடந்த உறவினர் திருமணத்திற்கு புறப்பட்டார்.ப.எடக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அவ்வழியே சென்ற வேன், பைக் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த ராமன் உள்ளிட்ட மூவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமன் இறந்தார். காந்திமதி மற்றும் குழந்தை ஷர்னியாகவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆலடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.