உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இப்தார் நோன்பு திறப்பு

இப்தார் நோன்பு திறப்பு

கடலுார்: கடலுார் எஸ்.என்.சாவடி மஸ்ஜிதே முஹம்மது யூனுஸ் பள்ளி வாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.கடலுார் மாநகர பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நடந்து வரும் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளில் அய்யப்பன் எம்.எல்.ஏ., டாக்டர் பிரவீன் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.அந்த வகையில், கடலுார் எஸ்.என்.சாவடி மஸ்ஜிதே முஹம்மது யூனுஸ் பள்ளி வாசலில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்படி, வேலன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் வேல்முருகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், செந்தில், தயாளன், முருகன், பள்ளி வாசல் தலைவர் அக்பர் அலி, செயலாளர் நுார் முகமது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ