மேலும் செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு
19-Mar-2025
விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஐக்கிய ஜமாஅத் தலைவர் அப்துல் பாரி தலைமை தாங்கினார். ஜமேஷ், குழந்தை சுதந்திரன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆபிருதீன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு காஜி அக்பர் அலி, விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கவுரவ தலைவர் ஆக்னல், ஜமாஅத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் ஷபியுல்லா சிறப்புரையாற்றினர்.மங்கலம்பேட்டை தி.மு.க., பேரூர் செயலாளர் செல்வம், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், கவுன்சிலர்கள் ராமானுஜம், காங்., வேல்முருகன், முகம்மது சாலி, மன்சூர் அகமது உட்பட பலர் பங்கேற்றனர். துணை செயலாளர் நைனா முகம்மது நன்றி கூறினார். அதில், சிறப்பு தொழுகை முடிந்து, அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
19-Mar-2025