ஏ.அகரம் ஊராட்சியில் ரூ. 8 லட்சத்தில் கலையரங்கம்
வேப்பூர் : வேப்பூர் அருகே புதிய கலையரங்கம் கட்டுமான பணியை தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்.வேப்பூர் அடுத்த ஏ.அகரம் ஊராட்சியில் கலையரங்கம் கட்டிதர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில், புதிய கலையரங்கம் கட்ட,மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கட்டுமான பணியை தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன்,பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.அப்போது, மாவட்ட கவுன்சிலர் சக்திவிநாயகம் ஊராட்சி தலைவர் வைரம் பாண்டியன், தி.மு.க., கிளை செயலர் பெரியசாமி, இளைஞரணி நிர்வாகி மணிவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சோலைராஜன், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.