உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

நெய்வேலி : நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்.நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 4 ல் உள்ள எம்.எல்.ஏ., இல்லத்தில் பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். காடாம்புலியூர் அடுத்த மேட்டுக்குப்பத்தை சேர்ந்த பா.ம.க., இளைஞரணி செயலாளர் சங்கர் நடுக்காட்டுப்பாளையம் செயலாளர் சீனு. மேட்டுக்குப்பம் பா.ஜ., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க., தே.மு.தி.க., கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை எம்.எல்.ஏ., வரவேற்று சால்வை அணிவித்தார். இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றிய அவைத்தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், காட்டுபாளையம் தனபதி, ஊராட்சி பிரதிநிதி ரவி, நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, நாகலிங்கம், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை