உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஞானகுரு வித்யாலயா பள்ளியில் துவக்க விழா

ஞானகுரு வித்யாலயா பள்ளியில் துவக்க விழா

திட்டக்குடி: திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் புதிய இன்ட்ராக்ட் கிளப் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சிவகிருபா தலைமை தாங்கினார். இன்ட்ராக்ட் மாவட்ட சேர்மன் பிரபாகர், ரோட்டரி சங்க துணை ஆளுநர் அசோக்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று புதிய இன்ட்ராக்ட் கிளப்பை துவக்கி வைத்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் இனியன், செயலாளர் பிரபு, பொருளாளர் சதீஷ் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்றனர். இன்ட்ராக்ட் கிளப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி