உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உள்வாங்கிய சாலை சீரமைப்பு

உள்வாங்கிய சாலை சீரமைப்பு

கடலுார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், உள்வாங்கிய கடலுார் தென்பெண்ணையாறு புதிய மேம்பாலத்தின் இணைப்பு சாலை சீரமைக்கப்பட்டது.பெஞ்சல் புயல் மழையால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடலுார் அருகேதென்பெண்ணையாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு நகரின் பல்வேறு பகுதிக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்துவெள்ளக்காடாக மாறியது. வெள்ளநீர் வடிந்தபின், டிச., 7ம் தேதி கடலூர் புதுச்சேரி சாலையில் மஞ்சக்குப்பம்ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே தென்பெண்ணை ஆற்றின் மீதுள்ள புதிய மேம்பாலத்துடன் இணையும்இடம் உள்வாங்கி, பாலத்தின் ஓரப்பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது.இதனால் வாகனங்கள் பாலத்தை கடக்கும் போது அதிர்வு ஏற்பட்டதால், வாகனஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் டிச., 8ம் தேதி செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக மறுநாள் தற்காலிகமாக பள்ளத்தில் ஜல்லிக்கலவை போடப்பட்டது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு, பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை உள்வாங்கிய இடத்தில் புதியசாலை அமைக்கப்பட்டது. இதனால் வாகனஓட்டிகள், நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ