உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு

மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு

மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. போலீசாரின் தீவிர நடவடிக்கை காரணமாக புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டது.புகையிலை பொருட்களுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காததால் பைத்தியம் போல் நடந்து கொள்ள துவங்கினர். இதை பயன்படுத்தி கொண்டு மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் களத்தில் இறங்கினர். தாராளமாக கஞ்சா கிடைப்பதால் பள்ளி, கல்லுாரில் படிக்கும் சிறுவர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்த துவங்கினர். இவர்களால் தினமும் பல்வேறு பிரச்னைகள் நடப்பது போலீசாருக்கு தலைவலியாக மாறியுள்ளது. கஞ்சா போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் பல குற்ற செயல்களை செய்கின்றனர். அதிகளவு சிறுவர்கள் கஞ்சா பயன்படுத்துவதால் அதற்கு தேவையான பணத்துக்காக வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்களை அரங்கேற்றுகின்றனர். 90 சதவீதம் குற்றங்கள் கஞ்சா காரணமாகவே நடக்கிறது. குற்றவாளிகள் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாராளமாக கஞ்சா கிடைப்பதால் வருங்கால சமுதாயத்தினர் அடிமையாகி வருகின்றனர். கஞ்சா விற்பனையை தடுத்தாலே பல குற்ற சம்பவங்களை தடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !