உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை

ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை

விருத்தாசலம் : கோவாவில் நடந்த நான்காவது ஆசிய அளவிலான ரோல்பால் போட்டியில், ஈரான் அணிகளை வீழ்த்தி, இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.நான்காவது ஆசிய அளவிலான ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, கோவா மாநிலம் மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில், கடந்த 16 முதல் 19ம் தேதி வரை நடந்தது. அதில், இந்தியா சார்பில் மகளிர் பிரிவில் தமிழக மாணவிகள் வசிமா பானு, மகதி முத்துக்குமார், ஆண்கள் பிரிவில் கடலுார் மாணவர் சிவச்சந்திரன் பங்கேற்றனர்.கடந்த 19ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் மகளிரணியில் இந்திய அணி, ஈரான் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. அதேபோல் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, ஈரான் அணியை 11-4 என்ற கோல் கணக்கில் வென்று, தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ரோல்பால் நிறுவனர் மஹாராஷ்டிரா ராஜூ தபாடி, கூட்டமைப்பின் தலைவர் தபான் ஆச்சார்யா ஆகியோர் தங்கப்பதக்கம், கோப்பை வழங்கினர்.இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் ராஜசேகர் ஆகியோரை தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், இன்டர்நேஷனல் ரோல்பால் இயக்குனர் ஸ்டீபன் டேவிட், தமிழ்நாடு ரோல்பால் சங்கத் தலைவர் செல்லமுத்து, செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், மாநில செயலாளர் திருச்சி மதுநிதா, துணைச் செயலாளர் கண்மணி ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை