உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்மனை விற்பனை

சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில்மனை விற்பனை

கடலுார்: வேப்பூர் சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:வேப்பூர் வட்டம், பெரியநெசலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு செய்யப்படாத, காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இங்கு, 63 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளன. புதிதாக தொழில் தொடங்குவதற்கு தொழில் மனை வாங்க விரும்புவோர் https://www.tansidco.tn.gov.inஎன்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.மேலும், தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள பிற தொழிற்பேட்டைகளின் காலி மனைகள் விபரங்கள் இதே இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.காலி தொழில் மனைகளை பார்வையிட கடலுார் செம்மண்டலம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள கிளை மேலாளரை நேரிலோ, தொலை பேசியிலோ 9445006573 அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ (tansidco.org) தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவலை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை