உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோ வழக்கில் லஞ்சம் ஏட்டு, இன்ஸ்., சஸ்பெண்ட்

போக்சோ வழக்கில் லஞ்சம் ஏட்டு, இன்ஸ்., சஸ்பெண்ட்

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, 17 வயது சிறுவன் ஏப்., 11ம் தேதி பலாத்காரம் செய்தான். விருத்தாசலம் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரித்தார்.சிறுமியின், 41 வயது தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. போலீசார் சிறுமியின் தாய், அவரது கள்ளக்காதலன், 17 வயது சிறுவன் உட்பட மூவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.இந்நிலையில், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கிடைத்த தகவலில், சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று பேரை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். மூன்று பேருக்கும், பலாத்கார சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெரியவந்தது. இருந்தும் அவர்களை மிரட்டி, போலீசார் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றிய எஸ்.பி., ஜெயக்குமார், மேல் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதில் லஞ்சம் பெற்றது உறுதியானதால், இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை