உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு செயல்படுகிறது. இதில், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வெங்கிடுசமுத்திரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சிதம்பரம் துணை மேலாளர் விஸ்வநாதன், தர ஆய்வாளர் ராமநாதன் ஆகியோர் நெல்லின் தரம் மற்றும் அளவீடு குறித்து ஆய்வு செய்தனர்.அப்போது, கொள்முதல் நிலைய செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தனர். இதில் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை