உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

 பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமியார்பேட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆய்வு நடந்தது. இந்த பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது: சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக்கொடி அங்கீகாரம் பெறும் முயற்சிக்காக அழகிய நடைபாதைகள், பூங்கா, கடற்கரையில் ஓய்வெடுக்கும் பகுதிகள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சி.புதுப்பேட்டை ஊராட்சியில், வனத்துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 13 லட்சத்து, 46 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாங்குரோவ் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணை, பழங்குடியினர் மேம்பாட்டிற்காக பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ், வீட்டிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் வகையில், தலா 300 ச.அடி., பரப்பில், 5 லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 36 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக, பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 41 மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, சப் கலெக்டர் கிஷன்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட் டு வாரிய உதவி செயற்பொறியாளர் கனகராஜ், பி.டி.ஓ.,க்கள் அ ருளானந்தன், சிவகாமி உள்ளிட்டவர்கள் உடனி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !