உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் பயிருக்கான காப்பீடு 30 வரை பதிவு செய்யலாம்

நெல் பயிருக்கான காப்பீடு 30 வரை பதிவு செய்யலாம்

கடலுார்: விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் வரும் 30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம், 15ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் மழை போன்ற காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை.இதனை கருத்தில் கொண்டு, காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வழங்க மாநில அரசு சார்பில், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மாநில அரசின் கோக்கைகளை ஏற்று சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு கால அவகாசம் 30ம் தேதி வரையில் மத்திய அரசு நீடிப்பு செய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில், 2 லட்சத்து 15 ஆயிரத்து 208 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 83 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.வெள்ளம், புயல், வறட்சியிலிருந்து விவசாயிகள் பாதுகாப்பு பெற பயிர் காப்பீடு செய்வது அவசியம். எனவே இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் 30ம் தேதிக்குள் நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக வரும் சனி மற்றும் ஞாயிற்று் கிழமைகளிலும் விவசாயிகள் பயன்பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் செயல்படும் பொது e-சேவை மையங்கள் மற்றும் தனியார் இடங்களில் செயல்படும் பொது e-சேவை மையங்கள் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை