மேலும் செய்திகள்
கடற்கரையில் துப்புரவு பணி
22-Sep-2024
கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இருளர் பழங்குடியின மீனவ குடும்பங்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட துவக்க விழா நடந்தது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் கிரிஜா வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, முதன்மை விஞ்ஞானி வேல்விழி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை, விஞ்ஞானி தமிழகன், ஹேமா ஆகியோர் தொகுத்து வழங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா, தலைமை தாங்கி பேசினார். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சவுமியா சுவாமிநாதன் பேசுகையில், இங்கு, கிராம அறிவு மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, இருந்து ்கொண்டே உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். கிராம அறிவு மையம் உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் இந்த மூன்றையும் முன்னுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றார்.விழாவில், பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், கடலுார் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், தலைமை ஆசிரியர்கள் குமரவேல், உமா, கிராம தலைவர்கள் செஞ்சி, அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் சகாயராணி நன்றி கூறினார்.
22-Sep-2024