பழங்குடியின சர்வதேச மக்கள் தினம்
கிள்ளை: கிள்ளை, தளபதி நகர் இருளர் பகுதியில், உலக பழங்குடியின சர்வதேச மக்கள் தின விழா நடந்தது. கிரீடு நகர் தலைவர் ரவி தலைமை தாங்கினார். கீஸ்டோன் பவுண்டேசன் ஆலோசகர் ராபர்ட்லியோ, நீலகிரி மாவட்டம், பர்லியார் முன்னாள் பழங்குடியின கிராம பஞ்சாயத்து தலைவர் சுசீலா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் கிள்ளை பேரூராட்சி சேர்மன் மல்லிகா முத்துக்குமார், துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் இருளர் மக்களின் வாழ்வியல் குறித்து பேசினர். விழாவில், பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் உட்பட பலர் பங்கேற்றனர். சங்கேஸ்வரி நன்றி கூறினார்.